Skip to Content

எமது சமூகத்தில் உதவி மிகவும் தேவைப்படும் மக்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் NSW இல் வலுவான சமூகங்களை உருவாக்க DCJ விரும்புகிறது.

குழந்தைகள் மற்றும் குடும்பங்கள், ஊனமுற்றவர்கள், மற்றும் முதியவர்களுக்கு உதவும் திட்டங்களுக்கு நாங்கள் நிதி அளிக்கிறோம்.

போதுமான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாத அதி உயர் ஆபத்து உள்ள குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்.

NSW இல் குழந்தைகளையும் இளம் வயதினரையும் குறிப்பிடத்தக்க தீங்கு ஏற்படும் அபாயத்தில் இருந்து பாதுகாக்க, DCJ சட்டபூர்வ பொறுப்பைக் கொண்டுள்ளது. இதை அடைவதற்கு, மற்ற NSW அரசாங்க துறைகள், அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) மற்றும் சமூகத்துடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுகிறோம்.

குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களுக்கு நாங்கள் நிதியளிக்கிறோம். இந்த ஆதரவு கீழ்கண்ட திட்டங்களுக்கும் அளிக்கப்படுகிறது.

  • கஷ்டப்படும் புதிய பெற்றோருக்கு உதவி
  • வலுவான குடும்பங்களை உருவாக்க சிறந்த குழந்தை வளர்ப்புப் பற்றி கற்றுக்கொடுப்பது
  • மது மற்றும் பிற போதைப்பொருள் பயன்பாட்டினால் பிரச்சனைக்குள்ளாகும் பெற்றோருக்கு உதவி
  • மனநல பிரச்சினைகள், அறிவார்ந்த இயலாமை அல்லது கற்றல் சிக்கல்களை நேர்கொள்ளும் குடும்பங்களுக்கு ஆதரவு

வீ ட்டில் பாதுகாப்பாக வாழ இயலாத குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு பராமரிப்புக்கான நிதியை DCJ வழங்குதல். இதில் ஓர் அரச சான்றளிக்கப்பட்ட கவனிப்பாளர் அல்லது உறவுமுறை பராமரிப்பும் அடங்கும். குழந்தைகளுக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த தொடக்கத்தை உறுதி செய்வதற்காக தத்தெடுப்பு, பாதுகாப்பு மற்றும் நிரந்தர பராமரிப்பு விருப்பங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

வீட்டில் ஒரு குழந்தை துன்புறுத்தப் படுகிறது அல்லது பாதுகாப்பாக இல்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களானால் 13 21 11 என்ற குழந்தை பாதுகாப்பு உதவி எண்ணில் (Child Protection Helpline) , பகல் அல்லது இரவில், வாரத்தில் 7 நாட்களிலும் எந்த நேரத்திலும் அழைக்கலாம்.

வீட்டு மற்றும் குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் மக்களுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்.

உங்களுடைய துணைவர், கணவர், தந்தை அல்லது வீட்டிலுள்ள வேறு யாரோ உங்களை அச்சுறுத்தினாலோ அல்லது உங்களையோ அல்லது உங்களுடைய பிள்ளைகளையோ வன்முறைக்கு ஆளாக்கினாலோ, நீங்கள் உதவி கேட்கலாம். 1800 656 463 என்ற வீட்டு வன்முறை எண்ணில் (Domestic Violence Line) வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் அழைக்கலாம்.

வீட்டு மற்றும் குடும்ப வன்முறை, துஷ்பிரயோகம் உள்பட வன்முறைகளிலிருந்து தப்பித்துள்ளவர்களுக்கு “வன்முறையை அகற்றி இருந்த வீட்டில் தங்குதல்”(Staying home leaving violence) மற்றும் பாதுகாப்பாக தொடங்குதல் (Start Safely) என்ற பெயரில் ஆதரவு அளிக்கிறோம்.

நீங்கள் ஒரு மூத்த நபராக இருந்து (பொதுவாக 65 வயதிற்கு மேற்பட்ட) துஷ்பிரயோகிக்கப்படுவர் என்றாலோ அல்லது இன்னுமொரு வயதானவர் துஷ்பிரயோகம் அனுபவிக்கின்றார் என்று நீங்கள் கவலைப்பட்டால் மூத்தோர் துஷ்பிரயோக உதவி எண் மற்றும் வள பிரிவிற்கு (Elder Abuse Helpline and Resource Unit )1800 628 221 என்ற எண்ணில் அழைக்கவும்.

உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டால், முதலில் 131 450, என்ற எண்ணை அழைத்து, உங்கள் விருப்பமான மொழியை தெரிவித்து, பின்னர் மூத்தோர் துஷ்பிரயோக உதவி எண்ணில் (Elder Abuse Helpline) தொடர்பு கொள்ளுங்கள். மூத்தோர் துஷ்பிரயோக உதவி எண் (Elder Abuse Helpline) என்பது துஷ்பிரயோகம் அனுபவிக்கும் வயதானவர்களுக்கு ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கும் ஓர் இலவச, இரகசிய சேவை ஆகும்.

தகுதி உள்ள நபர்களுக்கு நாங்கள் வீட்டு உதவி மற்றும் ஆதரவு வழங்குகிறோம்.

தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்களுக்கு வீட்டுவசதி உதவி தேவைப் பட்டால் நாங்கள் ஆதரவு மற்றும் சேவைகளை வழங்குகிறோம். எங்கள் சேவை கீழ்க்கண்டவாறு:

  • வாடகை செலுத்த கஷ்டப்படும் அல்லது வாடகைக்கு வீடு எடுக்க கஷ்டப்படும் மக்களுக்கு நிதி உதவி செய்தல்
  • பொது வீட்டுவசதி, சமூக வீட்டு வசதி மற்றும் பூர்வகுடி வீட்டு வசதிகளை குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு கட்டுப்படியாகும் இடங்களில் வீடுகளை வழங்குவது இந்த வகையான வீட்டு உதவி "சமூக வீட்டு வசதி (social housing)" என்று அழைக்கப்படுகிறது
  • சமூக வீடுகளில் வசிக்கின்ற மக்கள் வாழ்க்கையில் மேலும் மேன்பட உதவும் திட்டங்கள்.

சேவைகளை பெற சில தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு, 1800 422 322 இல் வீட்டு தொடர்பு மையத்தை அழைக்கவும்.

வீடில்லாமல் இருந்தாலோ, அல்லது வீடற்ற நிலைமை வரும் அபாயத்தில் இருந்தாலோ, குறுகிய காலத்திற்கு தங்குவதற்கு உங்களுக்கு ஓர் இடம் தேவைப்பட்டால், 1800 152 152 என்ற எண்ணில் Link2Home ஐ எந்த நேரத்திலும், பகல் அல்லது இரவு நேரத்திலோ அழைக்கவும்.

அவசர உதவி தொலைபேசி எண்கள்

இடம்தொடர்புநேரம்
நீங்கள் வீடற்றவர்களாக இருந்தால் அல்லது தங்குவதற்கு ஒரு தற்காலிக இடம் தேவை என்றால் Link2Home
1800 152 152
24/7
வீட்டு மற்றும் குடும்ப வன்முறை வீட்டு மற்றும் குடும்ப வன்முறை தொடர்பு எண்
1800 656 463
24/7
குழந்தை துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பு பற்றி தெரிவிக்க குழந்தை பாதுகாப்பு தொடர்பு எண்
13 21 11
24/7
அபாயத்தில் உள்ள மூத்தோர் மூத்தோர் துஷ்பிரயோக தொடர்பு எண்
1800 628 221
திங்கள் முதல் வெள்ளி வரை
மு.ப 8.30am - பி.ப 5
அவசர நிலைமைகள் NSW காவல்துறை அல்லது ஆம்புலென்ஸ்
000
24/7

உரைபெயர்ப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகள்

நீங்கள் DCJ சேவைகளைப் பயன்படுத்த விரும்பி, ஆனால் ஆங்கிலம் பேச இயலாதவரோ, அல்லது ஆங்கிலம் பேசுவதில் சிரமம் உள்ளவரோ என்றால், கீழேயுள்ள இலவச உரைபெயர்ப்பு  மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகளை பயன்படுத்தவும்.

வீட்டு வசதி சம்பந்தமான விடயங்களுக்கு :
All Graduates  உரைபெயர்ப்பு  மற்றும் மொழிபெயர்ப்பு சேவை: 1300 652 488
('All Graduates' இலிருந்து யாராவது ஒருவர், தொடர்புடைய வீட்டுவசதியளிப்பவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்களுக்கு இலவசமாக உரைபெயர்ப்பார்).
மேலும் விவரங்கள் அறிய, “ஆல் கிராஜுவேட்” (All Graduates) வலைத்தளத்தைப் பார்வையிடவும்: http://www.allgraduates.com.au

வேறு விஷயங்களுக்கு:
Translating and Interpreting Service (TIS National – மொழிபெயர்ப்பு மற்றும் உரை பெயர்ப்பு சேவை – TIS நேஷனல்): 131 450
(150 க்கும் மேற்பட்ட மொழிகள் அடங்கும் ஓர் இலவச சேவையாகும்).
மேலும் விவரங்கள் அறிய, TIS வலையதளத்தை பார்வையிடவும்: https://www.tisnational.gov.au

  • குடும்பம் மற்றும் சமூகசேகைகள்,நேர்முக விசாரணைகள் நடைபெறும் பொழுதும், சிக்கலான விடயங்களைப்பற்றிக் கலந்துரையாடும் பொழுதும் அல்லது உணர்ச்சிபூர்வமான விடயங்களைக் கையாளும் பொழுதும் தகுதிபெற்ற பயிற்றப்பட்ட உரைபெயர்த்துரைப்பாளர்களை வழங்குவதற்குக் கடமைப்பட்டுள்ளது.
  • பெரும்பாலான சந்தர்ப்பங்களில்,  குடும்பம்  மற்றும் நண்பர்கள் உரைபெயர்த்துரைப்பாளர்களாகச் செயற்பட முடியாது. ஆனால் அவர்கள் ஒரு நேர்முக விசாரணையின்போது அல்லது சந்தித்தலின்போது பக்கத்துணையாக உடன் இருக்கலாம்..
  • தகுதி பெற்ற உரைபெயர்ப்பாளரை தொலைபேசியிலோ  அல்லது நேரிலோ அலுவலக உத்தியோகத்தர் பெற்றுக்கொள்ள முடியாத போது மட்டுமே குடும்ப உறுப்பினரோ அல்லது நண்பரோ உரைபெயர்ப்பாளர்களாக செயற்பட முடியும்.
Was this content useful?
Your rating will help us improve the website.
Last updated: 20 Mar 2023